அது அவங்க கையில்தான் உள்ளது, எங்க கிட்ட ஏதுமில்லை.. தமிழிசை
அதிமுக ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
நெல்லை: அதிமுக அரசு தங்கள் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வது என்பது ஆட்சியாளர்களான அவர்களின் கையில்தான் உள்ளதே தவிர இதில் பாஜக செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
அதிமுகவின் ஓராண்டு ஆட்சிக் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நெல்லையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஓராண்டில் அதிமுக இரண்டாக உடைந்ததுதான் மிச்சம்.

மத்திய அமைச்சர்கள் 3 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிடுகின்றனரோ அதுபோல் தமிழக அமைச்சர்களும் தாங்கள் ஓராண்டில் மேற்கொண்ட சாதனைகளை பட்டியலிடுங்கள்.
அப்போதுதான் பொதுமக்களுக்கு என்னென்ன செய்தீர்கள், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வரும். அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறான தகவலாகும்.
தற்போது ஓராண்டு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 4 ஆண்டுகளையும் அதிமுக அரசு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அந்த 4 ஆண்டுகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்றால் அது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் தேர்தலை கொண்டுவரும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றார் அவர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications