சசிகலா என்னும் ‘சின்னம்மா’.. அவரேதான் பொதுச் செயலாளர்.. பொன்னையன் பேட்டி
ஜெயலலிதாவுடன் அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்ட சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுடன் அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்ட சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுடன் இணைந்து அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்டவர் சசிகலா. அவர்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று மீண்டும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு நாளை கூட உள்ள பொதுக் குழு அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாத இடத்தை அவரது தோழி சசிகலா இட்டு நிரப்ப வேண்டும் என்று அதிமுகவின் முதன்மை நிர்வாகிகள் சசிகலாவை முன்னிறுத்தி பேசி வருகின்றனர். இதற்கு கடுமையான எதிர்ப்பும் அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டம் தொடர்பாகவும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளைக் கூட உள்ள பொதுக் குழுவில் பொதுச் செயலாளர் பதவி நிரப்பட வேண்டும். அந்த செயல்முறை பொதுக் குழுவின் ஒரு அங்கமாக நாளை நடைபெற உள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரைக்கும் போட்டி ஏற்படவில்லை. வேறு யாரும் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பொதுக் குழுவிற்கும் செயற்குழுவிற்கும் உள்ளது என்ற சட்டவிதிமுறையை உருவாக்கிச் சென்றிருக்கிறார்.
அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்தாக வேண்டும். அந்த அடிப்படையில் பொதுச் செயலாளரை பொதுக் குழு நாளை தேர்ந்தெடுக்கும்.
அதிமுகவின் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், அமைச்சர்கள், அதிமுகவின் தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர்கள் என அனைவரும், ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் காலம் ஒன்றாக அவரது இல்லத்தில் தங்கி அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்டு வந்த அனுபவம் மிக்கவரான சசிகலா என்னும் சின்னம்மாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஆனால் இதுவரை சசிகலா அதற்கு ஒப்புதல் தர வில்லை. பொதுக் குழுவில் சசிகலா கலந்து கொள்வதில் பிரச்சனை எதுவும் இல்லை. அவர் கலந்து கொண்டாலும், இல்லாவிட்டாலும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கின்ற பொறுப்பு பொதுக்குழுவிற்கு இருக்கிறது. நாளை அது நடைபெறும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
ADMK's Next general secretary will be selected in general body meeting held tomorrow said ADMK's Spokesperson Ponnaiyan.
ஜெயலலிதாவுடன் இணைந்து அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்டவர் சசிகலா. அவர்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று மீண்டும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications