அதிமுக இரு அணிகள் இன்று பேச்சுவார்த்தை.. கட்சி ஆபிசிலிருந்து சசிகலா படத்தை தூக்குவதே முதல் நிபந்தனை
அதிமுகவின் இரண்டு கோஷ்டிகள் இணைப்பு தொடர்பாக சென்னையில் இன்று சுமூக பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
சென்னை : அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அணியைச் சேர்ந்த 7 நபர் குழு சென்னையில் இன்று சுமூக பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு அணி தரப்பிலும் 7 நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் குழுவினர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனைடியத் தொடங்குகின்றனர்.

திங்கட்கிழமையான இந்று காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை ராகு காலம் என்பதால் காலை 10 மணிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணியின் பிரதான கோரிக்கை.
இந்த கோரிக்கைக்கு எடப்பாடி அணி சம்மதம் தெரிவித்ததன் பேரிலேயே இரு அணிகளும் சந்தித்து பேச சம்மதம் தெரிவித்துள்ளன. எனினும் சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றே தீர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினகரனை விலக்கி வைப்பது என்ற நிபந்தனைக்கு அ.தி.மு.க. அம்மா அணி சம்மதம் தெரிவித்து விட்டதால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்றும் மற்ற நிபந்தனைகள் பற்றி பேச்சு நடத்தி இன்னும் 3 அல்லது 4 நாளில் உடன்பாடு எட்டப்படும் என்றும் அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
சசிகலா , தினகரன் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் 30 பேரை கட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.
இந்த நிபந்தனை தவிர முதல்- அமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது பேச்சு வார்த்தையின்போது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமரச திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி சபையில் இடம் அளிப்பது போன்ற மற்ற நிபந்தனைகளையும் ஓ.பன்னீர்செல்வம் அணி முன நிறுத்தியுள்ளது, இவற்றை ஏற்பதற்கு அ.தி.மு.க. அம்மா அணியினர் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தையின்போது தினகரன், சசிகலா தொடர்பான புது நிபந்தனைகள் விதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் சசிகலா படத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணி மீட்டிங் வருவதற்கு விதித்துள்ள நிபந்தனை என தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications