அரைகுறை ஆடை, கையில் மதுவுடன் பெண்: சென்னை பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை
சென்னை: மது கோப்பையை கையில் பிடித்தபடி, பெண் ஒருவர் ஏகாந்தமாக இருப்பதுபோன்ற காட்சியை சென்னை கோட்டூர்புரம் பஸ் நிறுத்தத்தில் விளம்பரமாக வைத்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகேயுள்ள கோட்டூர்புரம் பஸ் நிறுத்தத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து பஸ் ஏறுகிறார்கள். இந்த பஸ் நிறுத்தத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வைத்துள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் அரை குறை ஆடையுடன் பெண் ஒருவர் கையில் மது கோப்பையை ஏந்தியபடி ஏகாந்தமாக இருப்பது போன்ற காட்சி உள்ளது.
இது தமிழக கலாசாரத்திற்கு விரோதமானது என்றும், உல்லாச போக பொருளாக பெண்ணை பார்க்கும் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்றும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
அகில இந்திய மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் வனஜா இதுகுறித்து கூறுகையில், "பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற விளம்பரத்தை சென்னை மாநகராட்சி அகற்ற வேண்டும். அல்லது பேனர் இருக்கும் இடத்தில் தீயிட்டு கொழுத்துவோம்" என்றார்.
பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாந்தகுமாரி கூறுகையில், "அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் மது கோப்பையுடன் ஏகாந்தமாக நிற்பது போன்ற காட்சி, பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை மாநகராட்சியோ, அரசோ அனுமதிக்க கூடாது" என்றார்.
இதேபோன்ற விளம்பரம் சோழிங்கநல்லூர், ராஜிவ்காந்தி நெடுஞ்சாலை சோதனை சாவடியின் மேற்புரத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications