அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு - ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி அவருக்கு மதுரை ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது. அப்போது கோர்ட்டின் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். அதன்படி அவர் சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தான் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏயாக இருப்பதால் தொகுதி மக்களின் குறைகளை நேரில் சந்தித்து கேட்க முடியவில்லை என்றும், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்த வேண்டும்" என்றும் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஹைகோர்ட் ஏற்கனவே விதித்த ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்தி உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications