காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு சுணக்கம் காட்டுவது ஏன் ? கருணாநிதி
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அ.தி.மு.க. அரசு சுணக்கம் காட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபற்றி தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், வீரப்பன், "ரிப்போர்ட்டர்" இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது என்ற நோக்கில் ஐந்து நீர்த் தேக்கங்களை காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கட்டி ஏறக்குறைய 70 டி.எம்.சி. தண்ணீரைப் பதுக்கி வைத்துள்ளது கர்நாடகம். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக தனது பாசனப் பரப்பளவையும் விரிவுபடுத்தியுள்ளது" என்றெல்லாம் விளக்கியிருக்கிறார்.

இந்த விளக்கத்திலுள்ள உண்மை நிலவரங்களை அறிந்து, நியாயமான நீர்ப் பகிர்வுக்கு ஆணையிடும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டால்தான் காவிரிப் பிரச்சினை பெருமளவுக்குத் தீரும் நிலை உருவாகும்.
காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்புகளை உருவாக்கிட, மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக காலம் தாழ்த்தி வருகிறது; மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அ.தி.மு.க. அரசு சுணக்கம் காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications