ஆட்சியை கலைத்துவிட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம்.. சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் பரபரப்பு பேட்டி!
இப்போதுள்ள சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று அஇதிமுக சூலூர் எம் எல் ஏ கனகராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர்: தற்போதைய தமிழக அரசியல் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று அஇதிமுக சூலூர் எம் எல் ஏ கனகராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று கனகராஜ் சூலூரில் அளித்துள்ள பேட்டியில், "பதவி ஆசை காரணமாக மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டார் ஓபிஎஸ். மாவட்ட அளவிலான நிர்வாகிகளை கைவிட்டுவிட்டார், இப்போது யார் நிர்வாகிகள் என்பதே தெரியவில்லை. அதனால் இந்தக் குழப்ப சூழலில் நான் யாரை ஆதரிப்பது என்று தெரியவில்லை.

அதனால் தற்போதுள்ள சூழலில், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்திக்கலாம் . தற்போதைய சூழலில் எந்த அணிக்கும் எனது ஆதரவு இல்லை." என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "அஇதிமுகவில் அணிகள் இணைந்தாலும் இன்னும் பிளவு நீடிக்கத்தான் செய்கிறது. அதனால், ஆட்சியை கலைப்பே சரி. துணை முதலமைச்சராக பதவி ஏற்றதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்களின் ஆதரவு குறைந்து விட்டது. ஓபிஎஸ் அணியை இணைத்ததை எதிர்க்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எம்.எல்.ஏ கனகராஜ், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இப்போது எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று கூறியுள்ளார். இது அஇதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications