தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நெல்லை: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதேவேளை கட்சியின் அதிகாரமிக்க பொதுச்செயலாளராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தம்மை பொதுச்செயலராக்க முயற்சிக்கிறார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தருகின்றனர். ஆனால் தொண்டர்கள் எதிர்க்கின்றனர்.

இந்தநிலையில் சசிகலா முதல்வராக வரவேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று ஜெயலலிதா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்னர். ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் இன்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மொட்டை அடித்து ஒட்டு மொத்தமாக தீர்மானத்தை நிறைவேற்றுவோம். மேலும் அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து அவர் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம். சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை வைப்போம் என்று அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications