நெல்லை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கவுன்சில் குழு திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் திடீர் ஆய்வு செய்ததால் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் 150 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கல்லூரி தற்போது 50வது ஆண்டை நிறைவு செய்து பொன் விழா கொண்டாடி வருகிறது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை வரும் கல்வி ஆண்டில் 250 ஆக உயர்த்த அனுமதி பெற மருத்துவ கல்லூரி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மருத்துவ கல்லூரிக்கு பொன் விழா ஆண்டு பரிசாக ரூ.150 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனஏ மறறும் ரூ.15 கோடியில் புற்றுநோய் ஆய்வு மையம் நெல்லையை அடுத்துள்ள கல்லூரியில் கிராம பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான ஆராய்ச்சி மையம் ஆகியவை தொடங்க மத்திய, மா்நில அரசுகளுககு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் தற்போது 250க்கும் மேற்பட்ட மருத்துவ துறைகள் இயங்கி வருகின்றன. இந்த துறைக்கு தேவையான பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வுகூடங்கள் உள்ளன.
இந்த நிலையில் அகில இ்ந்திய மருத்துவ கவுன்சில் 4 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் நெல்லை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆந்திரா, நிஜாமாபாத் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜிஜிபாய் தலைமையில் பல்வேறு மருத்துவ துறையை சேர்ந்த பேராசிரியர்கள் 2 குழுக்களாக பிரிந்து மா்ணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதிகள், பேராசிரியர்கள் எம்ணிக்கை, ஆய்வு கூட வசதி, அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவ சாதனங்கள் வசதி உள்ளிட்டவைகளை ஆயவு செய்தனர். இதனால் மருத்துவ கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுளளது.


Click it and Unblock the Notifications
