பசிப்பிணி போக்கும் சிவ ஆலய அன்னாபிஷேக தரிசனம்
சென்னை: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட இறைவனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

‘பசி என்பது ஒரு பிணி' என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழியும் பிரசித்தம். வயிறு பசிக்கும் போது அதற்கு உணவு கொடுக்கவேண்டும். பசியின்றி அனைவருக்கும் உணவு அளிக்கும் இறைவனை அன்னத்தால் அர்ச்சனை செய்வதைக் காண கண் கோடி வேண்டும் அல்லவா? ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று இந்த நிகழ்வினை காணலாம். அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது நம்பிக்கை.
எவ்வளவு பெரிய செல்வந்தர்கள் என்றாலும் ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் சாப்பிடப் போகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்' என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது உண்மை.
ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான, தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய் இல்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.

சிவ ஆலயங்களில்
நேற்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், ஆகிய ஏழு சிவ ஆலயங்களிலு ம் அன்னாபிஷேகம் நடைபெற்றது.அன்னாபிஷேகத்தை தரிசித்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆயிரம் கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காரட், பீட்ரூட், பழங்கள், காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது, இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கங்கை கொண்ட சோழபுரம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி, மகஷாசுரமர்த்தினி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் நெல்லி பொடி, அரிசி மாவு, திரவியபொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், எலுமிச்சை பழம், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர், கங்கை தீர்த்தம் உள்பட 48 வகைப் பொருட்களால் மகா அபிஷேகமும், வில்வ இலை உள்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

2500 கிலோ அரிசி சாதம்
காலை 8 மணி முதல் 2, 500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைக்கத் தொடங்கப்பட்டது. பதிமூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, அரிசி அன்னமாக படைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி பரிவாரமூர்த்திகளுக்கு பல்வகை பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீகைலாசநாதரை 100 கிலோ அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், குளித்தலை ஸ்ரீ கடம்பனேஸ்வரர் திருக்கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications