நாகர்கோவில் திரையரங்கில் அஜித் படம் பாதியில் நிறுத்தம்.. ரகளை செய்த ரசிகர்கள் வெளியேற்றம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில் வியாழக்கிழமை திரையிடப்பட்ட நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம், இயந்திரக் கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் வெளியேற்றினர்.
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த "என்னை அறிந்தால்' திரைப்படம் வியாழக்கிழமை இரவு 10.30க்கு திரையிடப்பட்டது. படத்தைக் காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், இடைவேளைக்குப் பிறகு படம் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரையரங்கு ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் கூச்சலிட்டதுடன், திரையரங்கின் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
கோட்டாறு மற்றும் வடசேரி போலீசார் அங்கு வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், ரசிகர்களோ தொடர்ந்து அங்கு ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!













Click it and Unblock the Notifications