அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க.. ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நேரில் அழைப்பு
அலங்காநல்லூரில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கு மு.க. ஸ்டாலினை கிராம மக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை: பெரும் போராட்டத்திற்கு பிறகு அலங்காநல்லூரில் வரும் 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அலங்காநல்லூர் கிராம மக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், வலசை கிராமத்து மக்கள், குறவன்குளம் கிராம பொது மக்கள், ஒத்தவீடு கிராம மக்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு மீட்புக்குழுவினர், மாணவர் குழுவினர், அனைத்து சமுதாய இளைஞர் நலச் சங்கத்தினர் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வந்து மு.க. ஸ்டாலின் சந்தித்தனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொண்ட விழாக்குழுவினர், ஜல்லிக்கட்டு விழாவிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து, திமுக எம்எல்ஏ மூர்த்தி, ஜல்லிக்கட்டு பிரச்சனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை குறிப்பிட்டார். ஸ்டாலின் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று மூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications