காவிரி: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை காலை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை காலை அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. #CauveryManagementBoard அமைக்கும் வரை ஓய மாட்டோம்! pic.twitter.com/IfHF2KcMZu
— M.K.Stalin (@mkstalin) April 5, 2018
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழகம் முழுவதும் அமைதிவழியில் போராட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications