ரூ 10 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆம்பூர் தூய்மை பணியாளருக்கு! ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்
ஆம்பூர்: ஆம்பூரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி வரியை செலுத்துமாறு வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி பாபு (60). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத ஊதியமாக ரூ 10 ஆயிரம் கிடைப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ராணிக்கு திருச்சி மாவட்டம் பாலக்கரை வணிக வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில் அவர் ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸை பார்த்ததுமே ராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் 10 ஆயிரம் சம்பாதிக்கும் தான் எப்படி 2 கோடி ரூபாய் செலுத்த முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து ஆம்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ராணிக்கு ரூ 2 கோடி செலுத்துமாறு கூறி நோட்டீஸ் எப்படி வந்திருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு பகுதிக்குள்பட்ட மணப்பாறை சாலை மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் ராணி பாபு என குறிப்பிடப்பட்டுள்ளது. ராணியின் பான்கார்டு, ஆதார் கார்டுகளை கொண்டு இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் வரி பாக்கியாக ரூ 1,07,50,284 வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அபராதம் ரூ 1,07,05,294 மற்றும் வட்டி ரூ 24,86,436 என மொத்தம் ரூ 2,39,87,024 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது.
ராணி பாபு பெயரில் நிறுவனம் உள்ளதாக ஆவணங்கள் காட்டுவதால் அவரது பெயரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காட்கரை பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணபரிவர்த்தனைக்காக கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு ராணி பாபுவுக்கு கடந்த ஜூலை மாதமே கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஜிஎஸ்டி என்றில்லை, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட அதிக திறன் கொண்ட கருவிகள் இல்லாமலேயே ஏழை குடும்பத்தினர் சிலருக்கு லட்சக்கணக்கில் மின் கட்டணம் கட்டுமாறும் நோட்டீஸ்கள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications