டிடிவி தினகரன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. அடுத்த கட்ட பிளான் பற்றி ஆலோசனை! செயற்குழு தேதி மாற்றம்!
சென்னை : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், ஜூன் 7ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி தலைமை கழகத்தில் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அமமுக செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 7 ஆம் தேதி சென்னை தலைமை கழகத்தில் நடைபெறுவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செயற்குழு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் வரும் அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
முன்னதாக அதிமுகவில் ஈபிஎஸ் உடனான அதிகாரப் போட்டியில் பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்டெடுப்பதாக கூறினர். தொண்டர்களை ஒன்றிணைக்க மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் அமமுக செயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது, அவர் பங்கேற்கும் மாநாட்டில் தினகரன் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் அமமுகவில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என மாற்றுக் கட்சிகளுக்கு படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் டிடிவி தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications