திக்விஜய் சிங்கை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டேன்... அறிவித்தார் அம்ரிதா ராய்
சென்னை: நானும், திக்விஜய் சிங்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதை முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் டிவி தொகுப்பாளர் அம்ரிதா ராய் கூறியுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்குக்கும், ராஜ்யசபா டிவியில் தொகுப்பாளராக இருக்கும் அம்ரிதா ராய்க்கும் காதல் மலர்ந்தது. இது கடந்த ஆண்டு வெளியுலகுக்குத் தெரிய வந்தது. மேலும் இருவரும் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இருவரும் தங்களது உறவை ஒத்துக் கொண்டனர். திக்விஜய் சிங்கின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். அம்ரிதா ராய் தனது முதல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் சென்னையில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதை தற்போது அம்ரிதா ராய் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் அம்ரிதா ராய் கூறியிருப்பதாவது:

திருமணம் முடிந்தது
நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம்.

துணை நின்ற அனைவருக்கும் நன்றி
இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன்.

மனத் துயரம்
கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, மன அழுத்தத்தைத் தருவதாக அமைந்திருந்தது. சைபர் குற்றத்திற்கு நான் பலி கொடுக்கப்பட்டேன்.

நான் என்ன கிரிமினலா?
என்னை ஒரு கிரிமினல் போலவே பலர் பார்த்தனர், பேசினர், நடத்தினர். என்னைக் கேலி செய்யாதவர்களே இல்லை. பலவிதமான ஆபாச வார்த்தைகளால் என்னைத் தூற்றினர். ஆனால் எந்தத் தவறும் செய்யாதவள் நான்.

காதலில் நம்பிக்கை இல்லாதவர்கள்
காதல் மீதும், மரியாதை மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை சமூக வலைதளம் மூலம் தூற்றி மகிழ்ந்தனர். வக்கிரத்துடன் விமர்சித்து வந்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் கட்டுப்பாடு காத்தேன். அமைதி காத்தேன்.

என் மீது நம்பிக்கை வைத்து
இந்த காலகட்டத்தில் என் மீதும், திக்விஜய் சிங் மீது நான் வைத்திருந்த காதல் மீதும் நம்பிக்கை வைத்து நான் எனது வேலையைப் பார்த்து வந்தேன். எதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை.

வயது வித்தியாசத்தால் என்ன?
எங்களுக்குள் உள்ள வயது வித்தியாசம் குறித்தே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை முடிவு செய்யும் அறிவும், தெளிவும் எனது வயதுக்கு உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திருந்துங்கள்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நாகரீகமடைந்த, முற்போக்கு இந்தியாவில். நமது சட்டம், அரசியல் சாசனம் ஆகியவை எனது வாழ்க்கை, எனது வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை நானே முடிவு செய்யும் சுதந்திரத்தையும், உரிமையையும் எனக்குக் கொடுத்துள்ளது.

உள்நோக்கம் இல்லை
எனது முடிவுக்கு உள்நோக்கங்கள் இருக்கலாம் என்றும் சிலர் என்னைக் குற்றம் சாட்டலாம். காலம்தான் இதுபோன்ற விமர்சனங்களுக்கு தீர்ப்பளிக்க முடியும்.

எனக்கென்று மதிப்பு உள்ளது
நான் ஒரு கெளரமான வேலையில் இருக்கிறேன். தொழிலில் இருக்கிறேன். எனது வேலையில் சின்சியராக, உண்மையாக இரு்நது வருகிறேன். கடுமையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.

எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும்
எல்லாப் பெண்ளையும் போலத்தான் நானும். எனது தொழில் திறமையை நம்புகிறேன். தனிப்பட்ட முறையிலும், குடும்பப் பொறுப்புகளை நான் தொடர்ந்து சுமப்பேன். அதிலிருந்து விலகிப் போக மாட்டேன்.

காதலுக்காக திருமணம்.. சொத்துக்களுக்காக அல்ல
திக்விஜய் சிங் மீது வைத்த காதலால் அவரை திருமணம் செய்துள்ளேன். அவரது சொத்துக்களுக்காக நான் அவரை மணக்கவில்லை. அவரது சொத்துக்கள் அனைத்தையும், அவரது மகன், மகள்களுக்கு மாற்றி விடுமாறு அவருக்கு ஏற்கனவே கூறி விட்டேன். வேண்டுகோளும் விடுத்துள்ளேன்.

அவர் மட்டும் போதும்
அவருடனான எனது பயணத்தை சந்தோஷமாக ஆரம்பித்துள்ளேன். அதில் அவர் மட்டும் என்னுடன் வந்தால் போதும். கெளரவமான தொழில் எனக்கு உள்ளது. அதை வைத்து இந்தப் பயணத்தை நான் மேற்கொள்ளவுள்ளேன்.

அனைவருக்கும் நன்றி
எனது நண்பர்கள், எனது அலுவலக சகாக்கள், நலம்விரும்பிகள் ஆகியோருக்கு, அவர்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அம்ரிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications