பிரச்சினைகள்... குழப்பம்... மக்கள் நலக்கூட்டணி ஒரு மக்கிப் போன கூட்டணி: அன்புமணி
திண்டுக்கல்: பிரச்சனைகள், குழப்பங்கள் நிறைந்த மக்கள் நலக்கூட்டணி, மக்கிப் போன கூட்டணி என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் நகரில் பாமகவின் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அன்புமணி, "தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில்தான் அதிக அளவு முறைகேடு நடந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடு குறைந்துள்ளது. அதிமுக அரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மக்கள் நலக்கூட்டணி குறித்து அவர் விமர்சித்தார்.
அதாவது, "மக்கள் நலக் கூட்டணி மக்கிப்போன கூட்டணி. அதைப்பற்றி தெரிந்து விட்டது. ஏனென்றால் அவர்களுக்குள் முரண்பாடான கருத்து உள்ளது. முதலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பின்னர் அறிவித்தார்கள்.
அவர்களுக்குள் பிரச்சனைகள், குழப்பங்கள் நிறைய உள்ளது. அதைப்பற்றி நாங்கள் பேசப்போவது கிடையாது. ஏனென்றால் அதனை ஒரு கூட்டணியாக நாங்கள் ஏற்றது இல்லை" என அன்புமணி தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications