மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் களங்கம் ஏற்படுத்தியது போலீசார்: அன்புமணி ராமதாஸ்
சென்னையில் கலவரம் ஏற்பட்டதற்கு போலீசாரே காரணம் என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கலவரம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் களங்கம் ஏற்படுத்தியது போலீசாரின் திட்டமிட்ட சதி என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தினர். இதனால் சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை மெரினாவில் போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பல இடங்களில் சாலைமறியல் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் காவல்துறைதான் களங்கம் ஏற்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய அறவழி போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தேவை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மாணவர்களின் அறவழி போராட்டத்தில் களங்கம் ஏற்படுத்தியது போலீசாரின் திட்டமிட்ட சதி. சென்னையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டதற்கு போலீஸாரே காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications