பரிசலில் மக்களை மீட்டு, வெள்ளத்தில் நடந்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய அன்புமணி
சென்னை: வெள்ளத்தில் சிக்கித் தவித்த சென்னை மக்களை மீட்க தனது தொகுதியான தர்மபுரியில் இருந்து 10 பரிசல்களை வரவழைத்துள்ளார் பாமக இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யு.மான அன்புமணி ராமதாஸ்.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்க பாமக இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யு.மான அன்புமணி ராமதாஸ் தனது தொகுதியான தர்மபுரியில் இருந்து 10 பரிசல்களை வரவழைத்துள்ளார். மேலும் பரிசலை ஓட்டுபவர்களையும் அங்கிருந்து வரவழைத்து மக்களை மீட்க வைத்துள்ளார்.
#ChennaiFloods #ChennaiRainsHelp pic.twitter.com/xMlWrJBb7x
— Dr.Anbumani Ramadoss (@DrAnbumaniPMK) December 5, 2015 அவர் ஜாபர்கான்பேட்டையில் முழங்கால் அளவு நீரில் நடந்து சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மேலும் தண்ணீர் அதிகம் இருந்த பகுதிகளில் வீடுகளில் சிக்கிய மக்களுக்கு பரிசலில் சென்று உணவு வழங்கி பசியாற்றியுள்ளார்.
Helping out the flood affected people in Chennai. Brought 10coracles from Hogenakkal to rescue people
#ChennaiFloods pic.twitter.com/C1RaNnFtrE
— Dr.Anbumani Ramadoss (@DrAnbumaniPMK) December 3, 2015 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை எல்லாம் தயவு செய்து செய்யுங்கள் என்று அவர் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் பிறர் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதை பற்றி அறிந்த அன்புமணி கோபம் அடைந்தார்.
#ChennaiFloods #ChennaiRainsHelp pic.twitter.com/WVAnyIaqmy
— Dr.Anbumani Ramadoss (@DrAnbumaniPMK) December 5, 2015 நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications