ஓகி புயலால் கன்னியாகுமரியில் கடும் பாதிப்பு- தேசிய பேரிடராக அறிவிக்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழக அரசு கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட இடங்களை சரியான முறையில் பார்வையிடவில்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்து இருக்கிறார்.
கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட போதும் அரசியல் தலைவர்கள் யாரும் எட்டிப்பார்க்காத நிலையில் அன்புமணிதான் பார்வையிட்டிருக்கிறார். மேலும் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளி கன்னியாகுமரியில் பார்வையிட்டார் அன்புமணி ராமதாஸ். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசு மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதில் ''பாதிக்கப்பட்ட இடங்களை அரசு சரியான முறையில் பார்வையிடவில்லை எனவும் ,மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும், அத்தியவாசிய பொருள்கள் இல்லாமலும் தவித்து வருவதாகவும்'' கூறியுள்ளார்.
மேலும் ''லட்ச கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை , தென்னை, ரப்பர் போன்ற பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சரி யான இழப்பிடு வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் ''கேரளாவில் மீனவர்களை தேடும் பணி விரைவாக நடந்து வருகிறது ஆனால் இங்கு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் அனைவரும் தீவிரமாக உள்ளனர். கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து விரைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பிடை வழங்க வேண்டும்.'' என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் உருக்குலைத்துப் போட்டிருக்கும் நிலையில் எந்த ஒரு அரசியல் தலைவருமே எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் பாமக இளைஞர் அணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் முதல் தலைவராக சென்று குமரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications