வேதனை அளிக்கிறது அனிதாவின் தற்கொலை.. அரசுக்கு பாடம் கற்றுக்கொடுப்போம்: நடிகர் கமல்ஹாசன்
நீட் தேர்வால் மருத்துவக்கல்வியை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இது தொடரக்கூடாது என்றும் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெர
திருவனந்தபுரம்: அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இது தொடரக்கூடாது என்றும் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், " இதைவிட அவலம் வேறு வேண்டுமா? அந்தப் பொண்ணு பேரு ஸ்ருதி, அக்ஷ்ரா என்று இருந்தால் மட்டும்தான் நான் கோபப்படணுமா? அனிதா எனக்கும் மகள்தான்.

இன்னும் இன்னும் கொடுமைகள் நடந்தால்தான் அரசுகள் தீர்வு தரும் என்றால் நீங்க வேண்டாம். நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். திருமாவளவன் பொங்கி எழவேண்டும். அவர் ஏன் வரவேண்டும் என்கிறேன் என்றால், ஒரு காரணத்துக்காகத்தான் சொல்கிறேன். அவர் நன்றாக கோபப்படுவார்.
அவர் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்து வெகுண்டு எழவேண்டும். மத்திய மாநில அரசுகள், நீதிமன்றங்கள் எல்லாம் நாம் வைத்ததுதான். அங்கே சென்று நன்றாக வாதாட வேண்டும், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசுகிறார்கள்.
இந்த விவாகரத்தில் அந்தப்பெண் எந்த ஊர், என்ன சாதி மதம் கட்சி என்றெல்லாம் பார்க்க கூடாது. பேதங்கள் கடந்து நியத்துக்காக நாம் அனைவரும் போராடவேண்டும். அனிதாவின் கனவு மண்ணோடு மண்ணாகிவிட்டது.
ஒன்று சேர்ந்து அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் " என்று நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications