மாநில தலைவர் அவரு தான்.. ஆனா.. அண்ணாமலையை சூழ்ந்த தொண்டர்கள்! பாவம் நயினார் நாகேந்திரன்! வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட பிறகு ஆன்மீகப் பயணம், அமெரிக்க பயணம் என பிசியாக இருந்த அண்ணாமலை தற்போது மீண்டும் தமிழக அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். திருப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆனால், மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் தனியாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் போன்றோருக்கு முன் எல்லாம் தமிழக பாஜக தலைவராக இருந்தது யார் என்று பலருக்கு தெரியாது. அதற்கு பிறகு பாஜக தலைவராக வந்த தமிழிசை ஓரளவு பாஜகவை வளர்த்தெடுத்தார்.

அவருக்கு பிறகு தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகன் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து சில மாத இடைவெளியில் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

Annamalai Nainar Nagendran BJP

உண்மையை சொல்லப் போனால் பாஜகவில் அதிக அளவில் இளைஞர்களை திரட்டியது அண்ணாமலை என்கின்றனர் பாஜகவினர். தொடர்ந்து அண்ணாமலை சந்தித்த தேர்தல்களில் தோல்வியே கிடைத்தது. என்றாலும் ஓரளவு தொண்டர்கள் பலம் அதிகரித்தது. அதிரடியான அரசியல், ஆக்ரோஷமான பேட்டி என அண்ணாமலை சடசடவென வளர்ந்து கொண்டு இருந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அவரால் தான் முறிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா போன்ற அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேச, அதிமுகவினர் கொந்தளித்தனர். கூட்டணியும் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என விரும்பிய பாஜக தலைமை அதிமுகவை அணுகிய போது அவர்கள் வைத்த முதல் கோரிக்கை அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதுதான். தொடர்ந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என சில மாதங்களாகவே யூகங்கள் பரவி வந்த நிலையில் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் இருந்து இவர் பாஜகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டாலும் சில பாஜகவினர் அண்ணாமலை தான் தலைவர் என சமூக வலைதளங்களில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதில் வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் வெற்றி யாத்திரை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூரில் நேற்று பாஜக சார்பில் வெற்றி யாத்திரை நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் அண்ணாமலையின் பெயரை சொல்லும் போதெல்லாம் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். இதனை வைத்து அண்ணாமலைக்கு தான் கட்சியில் செல்வாக்கு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் இஷ்டத்துக்கு வீடியோ போட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வீடியோவானது பாஜக அண்ணாமலை ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

பேரணியில் கலந்து கொள்வதற்காக நயினார் நாகேந்திரன் அண்ணாமலையும் ஒன்றாக வந்தனர். ஆனால் சற்று முன் பின்னாக வந்தனர். முதலில் நயினார் நாகேந்திரன் நடந்து வந்த நிலையில் அவருடன் வெறும் இரண்டு நிர்வாகிகள் மட்டுமே நடந்து வந்தனர். பின்னால் அண்ணாமலை வந்து கொண்டிருக்க ஒட்டுமொத்த கூட்டமும் அவரை நோக்கியே இருந்தது. நாகேந்திரன் சென்ற பிறகு கூட அவரது பின்னால் யாரும் செல்லவில்லை. தொடர்ந்து அண்ணாமலை வந்தபோது ஏராளமான தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அண்ணாமலை வாழ்க என முழக்கம் இட்டனர்.

இதனால் நயினார் நாகேந்திரன் முகம் சற்றே வாடிப்போனது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் மேடையில் பேசும்போது அண்ணாமலையை விட்டுக் கொடுக்காமல் தான் நயினார் நாகேந்திரன் பேசினார். இந்த நிலையில் பாஜகவில் தனக்கு தான் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளவே அண்ணாமலை தனது ஆதரவாளர்களை வைத்து இது போன்ற வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் என குற்றம் சாட்டுகின்றனர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+