ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள்தான் இருந்தது- அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள்தான் இருந்தது என அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் வாக்குமூலம் அளித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள்தான் இருந்தது என அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை நடத்தி வருகிறார்.

Apollo doctor says that Jayalalithas diabetes was control in 14 years

கிட்டதட்ட 22-க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிவதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், அரசு அதிகாரிகள், ஜெ. வீட்டு ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் சாந்தாராமுக்கு நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பினார். இதையடுத்து அவர் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ஜெயலலிதாவுக்கு நிரீழிவு நோய் கட்டுக்குள் இருந்தது.

2000- 2014-ஆம் ஆண்டு வரை ஜெ.வுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருந்தது. அந்த காலகட்டத்தில் நான்தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன்.

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க முயன்றேன், அதுவும் முடியவில்லை என்று சாந்தாராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+