ஜெயலலிதா உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்... கடிதம் எழுதி வைத்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை...
திருச்சி : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி ஊடகங்களில் வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் 58 வயதான வீரராகவன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், தீவிர முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியாவார்.

இந்த நிலையில் நேற்று வீரராகவன் வீட்டில் உள்ள அறை மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வீரராகவன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் உடல் மண்ணுக்கு, உயிர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு என்று வீரராகவன் எழுதியிருந்தார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வந்த வதந்தியால் வீரராகவன் சோகமுடன் காணப்பட்டாராம்.
இது குறித்து குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் சோகத்துடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அவர் இந்த சோக முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்த வீரராகவன் 1973 - இருந்தே அ.தி.மு.க உறுப்பினர் ஆவார். மேலும் 30-வது வட்ட முன்னாள் செயலாளர் ஆவார். இவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர்.
வீரராகவன் தற்கொலை குறித்து அறிந்ததும் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications