சொத்துக்குவிப்பு.. ஓ.பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? திமுக மனுவில் கூறியுள்ளது இதுதான்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஓபிஎஸ்.க்கு எதிரான வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது?- உயர்நீதிமன்றம்- வீடியோ
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, திமுக ராஜ்யசபா எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சார்பில், சென்னை ஹைகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில்தான் உயர் நீதிமன்றம் இன்று இந்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த ஓர் பார்வை:
- ஓபிஎஸ் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.
- தனது வருமானம் குறித்த தவறான தகவல்களை வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
- தேனி மாவட்டத்தில் போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ரூ.140 கோடி மதிப்புள்ள நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்
- ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார்.
- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் இவர், சொத்துகளை வாங்கியுள்ளார்.
- அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா போன்ற வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓபிஎஸ் பிள்ளைகள் முதலீடு செய்துள்ளனர்.
- 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயலட்சுமி பெயரில் ரூ.24.20 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வேட்புமனுவில் தனது மனைவிக்கு ரூ.78 லட்ச ரூபாய்க்கு சொத்து உள்ளதாக தெரிவித்தார்.
- ஒப்பந்ததாரர், சேகர் ரெட்டியின் டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
- மார்ச் 10ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications