Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட 69 சதவீதம் குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 69 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் அளவிற்கு அதிகமாக மழை பெய்து வெள்ளத்தில் மிதந்தது சென்னை. இந்த ஆண்டு மழையே பெய்யாமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது, பல்வேறு காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டு வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்குமா அல்லது குறையுமா என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவிக்கும்.

இயல்பான மழை

இயல்பான மழை

இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தாமதமாக தொடங்கியது. இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செ.மீ. வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அக்டோபர் மாதம் 181.1 மி.மீ., நவம்பரில் 171.7 மி.மீ., டிசம்பரில் 89.2 மி.மீ. ஆக மொத்தம் 442 மி.மீ. மழை பெய்தால், அதுதான் இயல்பான அளவாகும்.

விவசாயம் பாதிப்பு

விவசாயம் பாதிப்பு

கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் அதாவது 676.1 மி.மீ. அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இடியுடன் மழைக்கு வாய்ப்பு

இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், குமரி கடல் பகுதியில் இருந்து கோவா கடற்கரை வரை உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே பகுதியில் நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.

69% மழை குறைவு

69% மழை குறைவு

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ள பாலச்சந்திரன், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளார். கடந்த ஆண்டை விட, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 69 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1974ல் கடும் வறட்சி

1974ல் கடும் வறட்சி

கடந்த 45 ஆண்டுகளில் 1974 மற்றும் 1995ம் ஆண்டுகளில்தான் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட மிகக் குறைவாக பெய்துள்ளது. 1974ம் ஆண்டில் சராசரி மழையைவிட 34 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்பது வானிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.

1995ல் குறைந்த மழை

1995ல் குறைந்த மழை

அதன்பிறகு 1995ம் ஆண்டில் சராசரி மழையைவிட 15 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. அந்த ஆண்டில் இயல்பைவிட வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்தபோதிலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்தில் இயல்பைவிட 69 சதவீதம் மழை அதிகமாகப் பெய்தது. அதையடுத்து தென்மேற்குப் பருவ மழையும் இயல்பைவிட 5 சதவீதம் கூடுதலாக இருந்தது. அதனால் தமிழகத்தில் பாதிப்பும் குறைவாக இருந்தது.

சமாளிப்பது எப்படி?

சமாளிப்பது எப்படி?

இந்த ஆண்டு 69 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்தில் 1974ம் ஆண்டு போல கடும் வறட்சி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் 5 வாரமே உள்ள நிலையில் 150 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்பது வானிலை ஆய்வாளர்களின் கணிப்பாகும். வருணபகவான் மனது வைப்பாரா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+