நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்!
நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

தேனி: நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் நடைபெற்றது.

சசி குடும்பம் மீது குற்றாச்சாட்டு
இந்தக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

அடிக்கடி கேட்பார்
ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்ற அவர், தினகரனுடன் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் தன்னிடம் அடிக்கடி தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா கேட்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விசுவாசமாக இருங்கள்
தான் தினகரனுடன் பேசுவதில்லை என்று கூறியவுடன் நீங்கள் ஒருவராவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தான் உயிருடன் இருக்கும் வரை தினகரன் வீட்டிற்குள் நுழைய விடமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெ.வுக்கு விசுவாசம்
ஜெயலலிதா ஏன் அவ்வாறு கூறினார் என்று தனக்கு தெரியவில்லை என்ற ஓபிஎஸ் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் தன்னால் விளக்கம் கேட்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்திற்காகவே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என்றதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் பரபரப்பு
தர்மயுத்தம் மேற்கொண்ட போது சசிகலா குடும்பத்தினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் ஓ.பன்னீர்செல்வம். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் சசிகலா குடும்பத்தினர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications