காட்டுப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை... கோவில்பட்டியில் பதற்றம்
கோவில்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கசவன்குன்று - ஈராட்சி இடையிலான காட்டுப் பகுதியில் 25வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் ஓன்று கிடப்பதாகவும், அருகில் இருசக்கர வாகனம் ஒன்றும் அனாதையாக கிடப்பதாகவும் கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த சடலத்தினை மீட்டு இறந்தவர் யார் ? எந்த ஊர் என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவரது மகன் ராஜா என்பது தெரியவந்தது.
ஆட்டோ டிரைவரான ராஜா நேற்றிரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றதும், பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கொலையான ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராஜாவை யாரோ அழைத்துச் சென்று முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம். இந்தக் கொலைக்குப் பெண்தொடர்பு. இல்லை கொடுக்கல் வாங்கல் காரணமா ? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில் ஓட்டுநர் கொலையானது கோவில்பட்டியில் பரபரப்பு நிலவுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications