For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவின் பால் கலப்பட வழக்கு – விழுப்புரம் கோர்ட்டில் 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் சிபிசிஐடி சார்பில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பாலில் கலப்படம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். வைத்தியநாதன் விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜாமீன் கேட்டு அக்டோபர் 25 ஆம் தேதி விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை 29 ஆம் தேதி நடந்தது. நீதிபதி குமார சரவணன் விசாரித்தார்.

Avin milk case postponed…

அப்போது இந்த மனு தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் வழக்கையும் நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைத்தியநாதன் சார்பில் வக்கீல்கள் தினகரன், தமிழரசன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசு சார்பில் வக்கீல் அம்ஜத் அலி ஆஜரானார்.

ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Awin milk Contamination case has been postponed to next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X