நள்ளிரவில் பரபரப்பு! தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! ஆறு பேர் படுகாயம்
தென்காசி: கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டுத் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் ஆறு ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலரும் கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலைக்குச் சென்று திரும்புவார்கள். இந்தாண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலைக்குப் பலரும் சென்று திரும்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். பெரும்பாலும் தனியாக கார் அல்லது வேன் வாடைக்கு எடுத்தே சபரி மலைக்குச் சென்று திரும்புகிறார்கள்.
வேன் விபத்து: இந்தச் சூழலில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விபத்தில் சிக்கியுள்ளது. வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், அது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அச்சன் கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. வேன் அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய நிலையில், உள்ளே இருந்த ஆறு ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம்: விபத்தில் சத்தம் கேட்டு உடனடியாக அருகே இருந்தவர்கள் ஓடி வந்து உதவியுள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேரும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியைக் கடந்த செல்வதில் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். இதனால் அங்குப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்.. டிரோன் உதவியுடன் சிறார்கள் உள்பட 8 பேர் கைது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications