போலீஸில் புகார் அளித்த ஆத்திரம்... ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்
போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் கழுத்தை அறுத்த கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பீதியில் உறைந்த மக்கள்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பீதியில் உறைந்தனர்.

கொலையாளி அழகேசன்
எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்க மறுத்த அஸ்வினி
மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினியை அதேபகுதியை சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க அஸ்வினி மறுத்துள்ளார்.

போலீஸில் புகார்
இதனால் அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது.

புகார் அளித்த ஆத்திரம்
அழகேசனின் தொல்லையால் மாணவி அஸ்வினி ஜாஃபர்கான்பேட்டைக்கு வீட்டை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன் போலீஸில் புகார் அளித்த ஆத்திரத்தில் அஸ்வினியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications