மதுரை: அழகிரி ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி
மதுரை: மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவர் திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஸ்டாலினை எதிர்த்து நடைபெறும் போஸ்டர் யுத்தம் கடந்த 5 மாதங்களாக நீடித்து வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுகவின் தோல்வியை ஒட்டி மதுரையில் ஸ்டாலினை எதிர்த்து நேற்றையதினம் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக அறிவித்து சில நிமிடங்களில் வாபஸ் பெற்றார்.
இதற்கு கருணாநிதி, அழகிரி என்ற பிள்ளையே தனக்கு இல்லை என்கிற ரீதியில் பேட்டியளித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அழகிரி பேட்டியளித்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே வந்த அழகிரியின் தொண்டர் ஒருவர், அழகிரியை வாழ்த்தி முழக்கமிட்டார். திமுகவை காக்க அழகிரியால் மட்டுமே முடியும் என்று கூறிய அவர், அறிவாலயத்திற்கு அழகிரி செல்லவேண்டும் என்று கூறிக்கொண்டே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றினார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை தட்டிப்பறித்தனர். போலீசார் உடனடியாக வந்து அவரை அப்புறப்படுத்தினர். மதுரையில் பொதுமக்கள் கூடியிருந்த நீதிமன்ற வளாகத்தில் அழகிரி ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications