கோபாலபுரத்தில் தயாளு அம்மாளுடன் மு.க.அழகிரி சந்திப்பு- கருணாநிதியை சந்திக்கவில்லை!
சென்னை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி சென்னை கோபாலபுரத்தில் தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து பேசினார். ஆனால் வீட்டில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை.
தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகனும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதற்கான மனுக்களை அவர்களின் கையெழுத்து பெற்று, தாக்கல் செய்யப்பட்டது.

பகல் 11 மணியளவில் மு.க. ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். பின்னர் அவர் தனது அறையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவாலயம் செல்லாமல் நேற்று வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் மு.க.அழகிரி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு செல்ல இருப்பதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து கருணாநிதி வீடு முன்பு ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மதியம் 1.45 மணியளவில் மு.க.அழகிரி கோபாலபுரம் வந்தார். அங்கு அவர் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் குறித்தும் அவர் விசாரித்தார். இந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டின் மேல் அறையில் இருந்தார். அவரை மு.க.அழகிரி சந்திக்கவில்லை.
பின்னர் 2.20 மணியளவில் மு.க.அழகிரி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications