ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு நூதன முறையில் வாக்கு கேட்கும் அழகு தமிழ் செல்வி
நமது சின்னம் இரட்டை விளக்கு என்று மூச்சு விடாமல் பேசி ஓபிஎஸ் அணிக்கு வாக்கு சேகரிக்கிறார் அழகு தமிழ் செல்வி.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நமது சின்னம் இரட்டை விளக்கு சத்தமா சொல்லுங்க என்று மூச்சு விடாமல் பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில்
டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தினகனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் , சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், உட்பட்ட தெருக்களில் பொது மக்களை மதுசூதனன் சந்தித்தார். பின்னர் வீடு வீடாக சென்று பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை மின் விளக்கு சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அழகு தமிழ் செல்வி ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தனர். தேர்தலில், ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புதிய வியூகங்கள் அமைத்து புதுமையான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடிமகன் என்று கூறிய டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுவது ஏன் என்று அழகு தமிழ் செல்வி கேள்வி எழுப்பினார். எங்கே நமது சின்னம் இரட்டை விளக்கு சத்தமா சொல்லுங்க என்று மூச்சு விடாமல் பிரச்சாரம் செய்தார். அவர் வேகமாக சொல்வது வாக்காளர்கள் காதில் இரட்டை இலை என்றே கேட்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications