சென்ட்ரலில் 5 மாத குழந்தை கடத்தல்: சிசிடிவி கேமராவில் பதிவான பெண் உருவம்- போலீஸ் விசாரணை
சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 மாத குழந்தைக் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு பழனி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயிலைத் தவற விட்டதால் குடும்பத்தோடு பயணிகள் காத்திருக்கும் ஏசி அறைக்கு முன்பு படுத்துத் தூங்கியுள்ளார்.
நேற்று காலையில் எழுந்து பார்த்த போது அருகே படுத்திருந்த 5 மாத பெண் குழந்தை யாழினியைக் காணாததால் ராஜாவும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை யாழினியை கடத்திச் செல்வது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியோடு, குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படுகிற ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பயணிகளிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications