Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குண்டு வெடிப்பில் இறந்த பவானி குடும்பத்தை தாங்கிய கர்நாடக அரசு! தள்ளி வைத்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த சென்னை பெண்ணான, பவானி தேவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்ததுடன் பல்வேறு வகையிலும் பக்க பலமாக ஆறுதலாக இருந்துள்ளது கர்நாடக அரசு. ஆனால் பாதிக்கப்பட்டவர் தமிழகத்தின் தலைநகரை சேர்ந்தவர் என்ற போதிலும், தமிழக அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் பவானி தேவி குடும்பத்துக்கு கிடைக்கவில்லை என்பது சோகம்.

சென்னை, பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி பவானி தேவி (38). பரத் என்ற 15 வயது மகனும், லட்சுமி என்ற 11 வயது மகளும் இந்த தம்பதிக்கு உள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக் அருகேயுள்ள மாவள்ளி பகுதியில் வசிக்கும், பாலனின் அண்ணன் மகேந்திரன் வீட்டுக்கு பவானிதேவி தனது குழந்தைகளோடு வந்திருந்தார்.

விருந்து சாப்பிட..

விருந்து சாப்பிட..

மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இவர்களை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார் மகேந்திரன். கடந்த மாதம் 28ம்தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதாக இருந்தனர் பவானிதேவி மற்றும் குழந்தைகள். ஆனால் ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆகாததால் ஞாயிற்றுக்கிழமையும் பெங்களூவிலேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மகேந்திரனின் மகன் கார்த்திக், தனது சித்தி மற்றும் குழந்தைகளையும், தனது தங்கை குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு எம்ஜிரோடு பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு விருந்து சாப்பிட சென்றார்.

ஐந்தே நாள் உறவு

ஐந்தே நாள் உறவு

இந்நிலையில்தான் சர்ச் தெரு பகுதியில் குண்டு வெடித்ததில் பவானியின் மண்டை ஓடு உடைந்து உயிரிழந்தார், அருகே நடந்து சென்ற கார்த்திக் படுகாயமடைந்தார். குழந்தைகள் உட்பட குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் சற்று தள்ளி நடந்து சென்றதால் காயமின்றி தப்பினர். புதன்கிழமை பெங்களூரு வந்த பவானி தேவி ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளார். மொத்தம் ஐந்து நாட்கள் மட்டுமே கர்நாடகாவுடன் பவானிதேவிக்கு உறவு.

ரூ.5 லட்சம் நிவாரணம், ஆம்புலன்ஸ் உதவி

ரூ.5 லட்சம் நிவாரணம், ஆம்புலன்ஸ் உதவி

ஆனால் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே பவானி தேவி குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சத்தை அறிவித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அதுமட்டுமல்ல, பவானி தேவி உடலை சென்னை கொண்டு செல்ல கர்நாடக அரசு தனது செலவிலேயே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆம்புலன்ஸ் பாதுகாப்புக்கு ஒரு ஜீப்பில் போலீசாரையும் சென்னை வரை அனுப்பியது கர்நாடக அரசு.

ரயில் டிக்கெட் கொடுத்த கர்நாடக அரசு

ரயில் டிக்கெட் கொடுத்த கர்நாடக அரசு

உச்சபட்சமாக, பெங்களூரிலிருந்து மகேந்திரன் குடும்பத்தார் சென்னை சென்று பவானிதேவி இறுதி சடங்கில் கலந்து கொள்ள ரயில் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உள்ளிட்ட பலரும் பவானி தேவி குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சென்னையில் கண்டுகொள்வாரில்லை

சென்னையில் கண்டுகொள்வாரில்லை

ஆனால் சென்னைக்கு பவானி தேவி உடல் சென்று சேர்ந்த பிறகு நிலைமையே தலைகீழாகிவிட்டது. பவானி தேவி உடல் அடக்கம் நடைபெற்றபோது தமிழக அரசின் எந்த ஒரு பிரதிநிதியும் அவரது குடும்பத்தாரை சந்திக்கவில்லை. அரசியல் கட்சியினரும் மறந்துவிட்டனர். பாஜக தலைவி தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே பவானி தேவி இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார்.

மண்ணின் மைந்தர்களை கைவிட்டதா?

மண்ணின் மைந்தர்களை கைவிட்டதா?

பவானிதேவி கணவர் பாலன் டயர் பிசினஸ் செய்துவருவது சென்னையி்ல், பவானி தேவியின் பெற்றோர் குடும்பம் வசிப்பது தி.நகரில். நீண்ட நெடுங்காலமாக சென்னையில் வசிக்கும் ஒரு குடும்பத்தை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு விட்டுள்ளது. ஆனால் 5 நாள் தொடர்பை மட்டுமே கொண்டிருந்த கர்நாடகாவும் அதன் அரசும் பவானிதேவி குடும்பத்தை தாங்கியுள்ளது.

தாங்க வேண்டியவர்கள் தள்ளி வைக்கலாமா?

தாங்க வேண்டியவர்கள் தள்ளி வைக்கலாமா?

சம்பவம் நடந்தது பெங்களூருவில்தானே என்பதால் தமிழக அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று எப்படி கூறிவிட முடியும். வெளிநாட்டில் தமிழர் இறந்தால் கூட தமிழக அரசு நிவாரணம் கொடுத்த உதாரணம் இருக்கும்போது, பவானிதேவி குடும்பத்திற்கு நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்பதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்பது சோகமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+