வேலை கிடைக்காத விரக்தி… திருவல்லிக்கேணி லாட்ஜில் பெங்களூர் வாலிபர் தற்கொலை
சென்னை: வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள். ஆனால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த இளைஞர் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பெயர் ஜெய்ஷா செக்கர் என்பதாகும். வயது 25. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 3 நாட்களாக தங்கியிருந்தார். தினமும் காலையில் இன்டர்வியூவுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமையன்று அவருடைய அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மாற்று சாவிக்கொண்டு அறையை திறந்தனர். உள்ளே அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். ஆங்கிலத்தில் அவர் எழுதி இருந்த இரண்டு வரி கடிதம் அறையில் இருந்தது. அதில் வேலை தேடி வந்தேன். கடவுள் என்னை கைவிட்டு விட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்ஷா செக்கர் வைத்திருந்த செல்போன் நம்பர் உதவியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications