நேற்று தோன்றிய அரிய சந்திர கிரகணம்.. பரங்கிமலைப் பகுதியில் எப்படி இருந்தது? போட்டோக்கள்!

நேற்று வானில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வானில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

சூப்பர் மூன், பிளட்டட் மூன், ப்ளூ மூன் ஆகிய மூன்றும் நேற்று ஒருசேர தோன்றியது. 152 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய கிரகணம் என்பதால் மக்கள் இதனை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

கடும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், கடற்கரைகளில் திரண்டு இந்த அரிய சந்திர கிரகணத்தை கண்டுகளித்தனர்.

சென்னை மாணவர்

சென்னை மாணவர்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திர கிரணகத்தை சென்னை பரங்கி மலையில் உள்ள புனித தோமையார் சர்ச் பகுதியில் பிஇ மாணவர் ஆதர்ஷ் புகைப்படம் எடுத்துள்ளார். அவற்றில் சில

பிளட் மூன்

பிளட் மூன்

கிரகணத்தை முன்னிட்டு பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டன. கிரகணத்தை முன்னிட்டு நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதுவே பிளட்டட் மூன் என அழைக்கப்படுகிறது.

சூப்பர் மூன், ப்ளு மூன்

சூப்பர் மூன், ப்ளு மூன்

சூப்பர் மூன் என்பதால் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றியது. ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வந்ததால் ப்ளு மூன் என்றும் அழைக்கப்பட்டது.

மூன்று நிலாக்கள்

மூன்று நிலாக்கள்

இந்த மூன்று நிலாக்களும் ஒரு சேர தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கண்டுகளித்தனர். மாலை 5.18 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் சென்னையில் மாலை 6.5 மணிக்கு தென்பட்டது. இந்த சந்திர கிரகணம் இரவு 8.40 மணிக்கு விலகி சந்திரன் இயல்பு நிலையில் காட்சியளித்தது.

படங்கள் ஆதர்ஷ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+