தேர்தலுக்கு வாங்க, தூக்கி அடிக்கிறோம்.. பாஜகவுக்கு கன்னியாகுமரி மாட்டிறைச்சி பிரியர்கள் எச்சரிக்கை!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மாட்டிறைச்சிப் பிரியர்கள் பாஜக மீதும், உள்ளூரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீதும் கடும் கோபத்துடன் உள்ளனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் மாட்டிறைச்சி விற்பனையாகும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாகும்.
இந்த நிலையில் பாஜக மத்திய அரசு மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு விதித்துள்ள தடை அவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சம் வியாபாரிகள்
இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்து ஒரு மாட்டுக் கறி வியாபாரி கூறுகையில் இந்த மாவட்டத்தில் மாட்டிறைச்சி அதிகம் விற்பனையாகும். இங்கு மட்டும் ஒரு லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எப்படி தடை விதிக்கலாம்
இந்தத் தடை உத்தரவு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். மாட்டிறைச்சி பிரியர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை ஏற்க முடியாது.

மறுபடியும் வருவாரா பொன். ராதா
எங்களது ஊரைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். இந்த உத்தரவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளது எங்களை அதிர வைத்துள்ளது. எந்த முகத்தைக் கொண்டு எங்களை அவர் பார்ப்பார்.

தேர்தல் வரட்டும்
எங்களது கோரிக்கையையும் மீறி மாடு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டால் பாஜகவை இந்த மாவட்டத்திலிருந்து துரத்தி அடிப்போம். எந்தத் தேர்தல் வந்தாலும் தோற்கடிப்போம். பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications