பீப் பாடல்: காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, என்மேல் எந்தத் தவறும் இல்லை என்று பேட்டி
கோவை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது.
இந்த பாடலில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதால் சிம்பு, அனிருத் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

பீப் பாடல்
இந்த விவகாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் ஜாமீனில் வரமுடியாத வழக்குகளை பதிவு செய்தனர். மகளிர் அமைப்புகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

அனிருத்
இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் நள்ளிரவில் சென்று கோவை போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் சிம்புவிற்கு பல்வேறு சம்மன்களை அனுப்பியும் கூட அவர் நேரில் ஆஜராவதை முன்ஜாமீன்கள் மூலம் தள்ளிப் போட்டு வந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
இதற்கிடையே ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24-ந்தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டி.ராஜேந்தர்
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் நேற்றிரவு கோயம்புத்தூர் சென்றார். அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சென்று இந்த வழக்கு தொடர்பான விவரங்களை நேரில் கேட்டறிந்தார்.
|
சிம்பு நேரில் ஆஜர்
இந்நிலையில் இன்று காலை 8.10 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்த சிம்பு கோவை கோட்டூர் போலீஸ் நிலையம் சென்று நேரில் ஆஜரானார்.

சிம்பு பேட்டி
காட்டூர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின் நடிகர் சிம்பு அளித்த பேட்டியில், காவல்துறையின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications