"கேஷுவல்" ஆளுநர் மாளிகையில் கண்கொள்ளா காட்சி.. எதிரிகள் முகத்தில் கரியை பூசிய தங்கமும் பிடிஆரும்!
சென்னை: இலாகாக்கள் மாற்றம் என்பது தெரிந்தாலும் ஆளுநர் மாளிகை ஒருவருக்கு ஒருவர் கேசுவலாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் பிடிஆரும் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழக அமைச்சரவையில் மத்திய அரசை வெடுக் வெடுக்கென கேள்வி கேட்பவர்களில் பிடிஆர் ஒருவர். மற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வந்தாலும், தான் வகித்து வந்த நிதியமைச்சர் பதவிக்கு ஏற்ப அதிகாரப்பூர்வ பல கேள்விகளை கேட்டு வந்தார் பிடிஆர்.

இவர் தனது டிவிட்டரில் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை பார்க்கும் நெட்டிசன்கள், பிடிஆர் டிக்ஷனரி என ஒன்றை போடுங்கள் சார், அப்போதுதான் நீங்கள் போடும் ட்வீட்டுகள் புரியும் என கலாய்த்து வந்தனர். மெத்த படித்தவர், பொருளாதார புலி.. இதனால் அவருக்கு நிதித் துறை பொருத்தமாக இருப்பதாக ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்தன.
எந்த விமர்சனங்களாக இருந்தாலும் மேம்போக்காக அடித்துவிடாமல் புள்ளி விவரங்களுடன் பதில் அளிப்பதில் பிடிஆர் வல்லவர். இவர் அண்மையில் பேசியதாக ஒரு ஆடியோ விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியது. அந்த விவகாரத்தை மத்திய உள்துறை வரை அதிமுக கொண்டு சென்றது. இந்த ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இரு முறை விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் விட்டபாடில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாக சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதிலும் பிடிஆரின் பதவி பறிக்கப்படும் என்றல்லாம் பேசினார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முதல் முறையாக நடந்த அமைச்சரவை மாற்றத்தில் நாசர் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக டிஆர்பி ராஜா அமைச்சரவையில் இணைந்தார். இந்த நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. அப்போ தங்கம் தென்னரசுவுக்கு என்ற கேள்வி எழுந்த போது அவருக்கு பிடிஆர் வசம் இருந்த நிதித் துறை ஒதுக்கப்படும் என தகவல் வந்தது. அமைச்சரவையிலிருந்து பிடிஆர் நீக்கப்படவில்லை அப்போ பிடிஆருக்கு என்ன துறை என்ற கேள்வி எழுந்தது.
மனோ தங்கராஜிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை என்றும் மனோவுக்கு நாசர் வசம் இருந்த பால் வளத் துறை அமைச்சகம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இன்று டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் மேற்கண்ட இலாகா மாற்றமும் வெளியானது. பொதுவாக நம்மிடம் இருந்து பறித்து வேறொருவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது என்றால் அவருடன் பேசுவதற்கும் பார்ப்பதற்குமே பிடிக்காத சூழல் இருக்கும்.

இந்த இலாகா மாற்றத்தால் திமுகவில் பெரிய சலசலப்பு ஏற்படும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் நாங்கள் இப்படித்தான் என்றும் யார் பெரியவர், யார் சிறியவர் என காட்ட அரசியலுக்கு வரவில்லை என்றும் கிடைத்த பணி எதுவாக இருந்தாலும் அதில் மக்கள் சேவையை தவிர வேறு ஒன்றும் இருக்காது என்றும் நெத்தி பொட்டில் அடித்தாற் போல் ஒரு காட்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது.
இலாகா மாற்றத்திற்கு முன்பாக அமைச்சர்கள் பிடிஆரும் தங்கம் தென்னரசுவும் ஆளுநர் மாளிகையில் கேசுவலாக பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த இலாகா மாற்றம் முன் கூட்டியே இருவருக்கும் தெரிந்திருந்தாலும் இருவருமே எந்த போட்டி, பொறாமை இன்றி வெறுப்பு விருப்பின்றி பேசி வருவது எதிர்க்கட்சிகளின் முகத்தில் கரியை பூசுவதாக பார்க்கப்படுகிறது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications