குப்பை தொட்டியில் கிடந்த பிச்சைக்காரரின் பணத்தை எடுக்க பொதுமக்கள் போட்டா போட்டி!
சென்னை: பிச்சைக்காரரின் சில்லரை காசுகளை எடுத்துச் செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியதால் போலீசாரை வரவழைத்து கூட்டத்தை கலைக்க செய்யும் அளவுக்கு நிலைமை போன சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெருவில் குட்டி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் விஸ்வநாதன் என்ற பிச்சைக்காரர் வாடகைக்கு தங்கியிருந்தார். ஆனால் ஆறு மாத காலமாக வீட்டு உரிமையாளருக்கு விஸ்வநாதன் வாடகை பணமே தரவில்லை என்று கூறப்படுகிறது.
வாடகையை தருமாறு பலமுறை குட்டி கேட்டுக்கொண்டும், விஸ்வநாதன் வாடகை பணத்தை தரவில்லை. வீட்டின் வெளிப்புறத்தையும் எப்போதும் விஸ்வநாதன் பூட்டியே வைத்திருப்பாராம். ஆறு மாதமாக வாடகை தராத ஆத்திரத்தில் விஸ்வநாதன் போட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குட்டி, அவரது பொருட்களை எடுத்து அருகிலுள்ள குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
அப்படி வீசியதில் ஒரு மூட்டை அவிழ்ந்துள்ளது. அவிழ்ந்த மூட்டைக்குள் இருந்து 5, 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் வெளியில் நீட்டியபடி இருந்துள்ளன. மேலும், சில்லரை காசுகளும் விழுந்துள்ளன. இதை சிலர் பார்த்து பிச்சைக்காரரின் சில்லரை மட்டும் நோட்டுக்களை அள்ளி சட்டை பையிலும், பேண்டு பாக்கெட்டிலும் திணித்துள்ளார். இதை பார்த்த மேலும் சிலர் பைகளை எடுத்து வந்து காசு எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியே கூட்டம் சேர்ந்து பிச்சைக்காரரின் பணத்தை பிரிப்பதில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் ஒருவரின் பணத்தை பிரிக்க மக்கள் போட்டி போட்ட சம்பவம் காஞ்சிபுரம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications