Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் பாட்டிக்கு 103-ஆவது ஹேப்பி பர்த்டே... 5 தலைமுறையினருடன் மகிழ்ச்சி கொண்டாட்டம்

திருப்பூரைச் சேர்ந்த ராமாத்தாள் என்ற 103 வயது மூதாட்டி தனது 5 தலைமுறையினருடன் பிறந்த நாளை கொண்டாடினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருப்பூர் பாட்டிக்கு 103-ஆவது ஹேப்பி பர்த்டே... 5 தலைமுறையினருடன் மகிழ்ச்சி கொண்டாட்டம்- வீடியோ

    திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ராமாத்தாள் தனது பேரன், கொள்ளு, எள்ளு பேரன்கள் புடைச்சூழ 5 தலைமுறையினருடன் 103-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அந்த கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது.

    திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவர் ராமாத்தாளை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டு ஆணைப்பாளையம் கல்லூரி சாலையில் வசித்து வந்தார். ராமாத்தாளைவிட ராமசாமி 2 வயது இளையவர்.

    இவர்களுக்கு 4 பெண்கள், 11 பேரப்பிள்ளைகள், 12 கொள்ளு பேர பிள்ளைகள், எள்ளு பேர பிள்ளைகள் என உள்ளதால் பாட்டி ராமாத்தாள் சுமார் 5 தலைமுறையினரை கண்டுள்ளார். ராமசாமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    103-ஆவது பிறந்தநாள்

    103-ஆவது பிறந்தநாள்

    கணவர் இறந்தவுடன் பாட்டி ராமாத்தாள் தனது இரண்டாவது மகளின் வீட்டில் வசித்து வருகிறார். பாட்டிக்கு நேற்று 102 வயது முடிந்து 103-ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 42 பேர் பாட்டியின் சொந்தக்காரர்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் பாட்டி நினைவுகூர்ந்ததால் உறவினர்கள் அவரது நினைவுத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அடிப்பட்டாலும் விரைவில் குணம்

    அடிப்பட்டாலும் விரைவில் குணம்

    இதுகுறித்து பாட்டியின் உறவினர்கள் கூறுகையில் எங்களை பொருத்தவரை ராமாத்தாளின் உடல் ஆரோக்கியம் கண்டு ஆச்சரியம் அடைகிறோம். அவருக்கு இதுவரை ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கிடையாது. அவருக்கு எங்காவது அடிப்பட்டாலும் விரைவில் குணமடைந்துவிடுவார். வயது மூப்பு காரணமாக பார்வையிழந்ததால் கடந்த ஆண்டு அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு 50 சதவீதம் பார்வை தெரிகிறது.

    கண் பார்வையில்லாதபோதும்

    கண் பார்வையில்லாதபோதும்

    அவர் கண் பார்வையில்லாத போதிலும் மகள்கள், பேரன்கள், கொள்ளு, எள்ளு பேரன்கள் என அனைவரையும் தொட்டு பார்த்தே கண்டுபிடித்து விடுவார். 5 தலைமுறையினருடன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதால் ராமாத்தாள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் அசைவ உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் குழந்தைகளுக்காக மட்டுமே சமைத்து போடுவார். பண்ணையில் விளையும் காய்கறிகளை உண்பதையே விரும்புவார்.

    ஆனாலும் வயது கணித்துள்ளோம்

    ராமாத்தாளுக்கு வயது சான்றிதழ் ஏதும் இல்லை. ஆனால் இவரது வயதை 94 வயதாகும் இளைய சகோதரர் மூலம் கண்டறிந்தோம். இளைய சகோதரரை விட ராமாத்தாள் 10 வயது மூத்தவர். எனவே இதை வைத்து ராமாத்தாளின் வயதை கண்டறிந்தோம். அனைவரும் நல்ல வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புவார். இதுபோன்ற ஒரு பிறந்தநாளை இதற்கு முன்னர் ராமாத்தாள் கொண்டியதில்லை என்கின்றனர் உறவினர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+