தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிப்போரில் பாஜகவுக்கு 10% - ஆம் ஆத்மிக்கு 8% பேர் ஆதரவு'
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களில் பாரதிய ஜனதாவுக்கு 10% பேரும் ஆம் ஆத்மி கட்சிக்கு 8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக, திமுகவுக்கு தலா 23% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ஊடகங்கள் தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் நக்கீரன் வாரம் இருமுறை ஏடு, "கன்னி ஓட்டு யாருக்கு" என்ற தலைப்பில் முதல் முறையாக வாக்களிப்போரிடம் ஒரு சர்வே நடத்தியது.
புதுவை, தமிழகத்தின் 40 தொகுதிகளில் முதல் முறையாக வாக்களிக்கும் 8 ஆயிரம் பேரிடம் இக்கருத்துக் கணிப்பை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு கணிசமான ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

அதிமுக, திமுகவுக்கு தலா 23%
முதல் முறையாக வாக்களிப்போரில் அதிமுக, திமுகவுக்கு தலா 23% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ்- 3%
இவர்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்போர் 3% தான்.

பாஜகவுக்கு 10%
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு 10% பேர் ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளனர்.

தேமுதிக 5%
செல்வாக்கு மிக்க கட்சியாக கருதப்படும் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 5% ஆதரவுதான் கிடைத்ஹ்டிருக்கிறது.

சமபலத்தில் விசிக, பாமக
விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தலா 4% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இடதுசாரிகளுக்கு..
முதல் முறையாக வாக்களிப்போரில் இடதுசாரிகளில் சிபிஎம்-க்கு 2%, சிபிஐக்கு 1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது நக்கீரன்.

மதிமுகவுக்கு 2%
இவர்களில் 2% பேர் மட்டும்தான் மதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சிக்கு 2%
மனித நேய மக்கள் கட்சிக்கும் 2% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

1% ஆதரவு கட்சிகள்
முதல் முறையாக வாக்களிப்போரில் புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1% ஆதரவு இருக்கிறது.

ஆச்சரியப்படுத்தும் ஆம் ஆத்மி
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 8% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications