தமிழகத்தில் பாஜக காலூன்ற முடிவே முடியாது.. பாஜகவுக்கு எதிராக முதல்முறையாக வாய்திறந்த செல்லூர் ராஜூ!
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜகவே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை வைத்தே கேள்வியை தொடங்கினார் தொகுப்பாளர் கார்த்திகேயன்.

ராஜேந்திர பாலாஜி கூறியதை போல்..
ராஜேந்திர பாலாஜி கூறியதை போலவே சின்னம் உங்களுக்கே கிடைத்துவிட்டது என்றார் நெறியாளர். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என ராஜேந்திர பாலாஜி கூறியது யாரை என்றும் கேட்டார் நெறியாளர் கார்த்திகேயன்.

ஜெ, எம்ஜிஆர் ஆன்மா..
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மேலே இருப்பவர் என ராஜேந்திர பாலாஜி சொன்னது, ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் தான் என விளக்கமளித்தார். எம்ஜிஆர் ஆன்மா, ஜெயலலிதா ஆன்மா பார்த்து கொள்ளும் என்பதே அதன் அர்த்தம் என்றும் அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார்.

சின்னத்தை பெறதானே?
இதைத்தொடர்ந்து அதிமுகவை அழிக்க யாரும் தேவையில்லை, அக்கட்சியினரே போதும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டிய நெறியாளர் இதற்கெல்லாம் ஏன் அமைச்சர்கள் வாய்திறக்கவில்லை என்றார். இரட்டை இலைச்சின்னத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தீர்களா என்றார்.

பாஜக காலூன்ற முடியாது
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்றார். மேலும் யாருடனாவது கூட்டணி சேர்ந்தால்தான் பாஜகவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அதிரடிக்கருத்தால் பரபரப்பு
பாஜகவுக்கு எதிராக அமைச்சர் செல்லூர் ராஜூ முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் ஆட்சியின் தலைமை பாஜகவிடம் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த அதிரடிக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications