தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் - நல்லகண்ணு

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது.
இதில் கலந்து கொண்ட இகம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சேவுக்குதான் விசுவாசமாக உள்ளனர். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது. இகம்யூ கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.-
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications