விபரீத திட்டம் இல்லாமல் பாஜக இப்படி செய்யாதே.. இவரை விட சமர்த்தா ஒருவர் வேணுமோ? கார்த்தி சந்தேகம்!
சென்னை: விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யாது, இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ல் இன்றைய நாள் அதாவது மார்ச் 10 அன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையர் குழுவில் 3 பேர் இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். இப்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருப்பதால் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார்.
எழுந்துள்ள பரபர கேள்விகள்: அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆண்டு வரை இருக்கும் நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், தேர்தல் ஆணையர் ஒருவர் திடீரென ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ள நிலையில், அதை உடனடியாக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டது எப்படி என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் ஏதேனும் கருத்து மோதல் ஏற்பட்டதா? அல்லது பாஜக அரசு, அருண் கோயலுக்கு அழுத்தம் கொடுத்ததா? தேர்தலை தள்ளி வைக்க திட்டமா? அல்லது புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி நியமிக்க விரும்புகிறாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
பாஜகவின் விபரீத திட்டம்: இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரை விட சமர்த்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரொம்ப மோசமான விஷயம்: அருண் கோயல் ராஜினாமா தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேத் கோகலே கூறுகையில், "இது மிகவும் கவலைக்குரியது. ஏனென்றால் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். பிரதமர் மோடி மற்றும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரின் பெரும்பான்மை வாக்குகளுடன் இனி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற புதிய சட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, அருண் கோயல் ராஜினாமாவுக்குப் பிறகு 3 தேர்தல் ஆணையர்களில் 2 பேரை பிரதமர் மோடி இப்போது நியமிப்பார். இது மிகவும் கவலைக்குரியது" என்று சாகேத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications