இந்துக்கள் மனதை புண்படுத்தினார் திருமாவளவன்... கோவையில் 8 காவல்நிலையங்களில் பாஜக புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து மதத்தை புண்படுத்தியதாக கோவையில் 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக இளைஞரணி சார்பில் 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் பேசியவை சர்ச்சையை எழுப்பியுள்ளன. தற்போது சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகார்களாக இருந்தன.

அந்த பௌத்த விகார்களை இடித்துவிட்டுதான் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அவற்றின் மீது புத்த விகார்களை பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தான் அப்படி ஒரு கருத்தை கூறவில்லை என்று திருமாவளவன் மறுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், இந்து மதத்தை புண்படுத்துவது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கோயம்புத்தூரில் பாஜக இளைஞரணி சார்பில் திருமாவளவன் மீது 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய திருமாவளவன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications