மகளுக்கு தீபாவளி சீர் கொண்டு சென்ற தாய் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
கடலூர்: குள்ளஞ்சாவடி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது பேத்தியின் உடல்கள் 8 நாட்களுக்குப் பிறகு அங்குள்ள முட்புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி குள்ளஞ்சாவடி தங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த சாந்தி (43) மற்றும் அவரது பேத்தி இந்துமதி (15) ஆகிய இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களது உடல்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடந்து அந்த பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவர்களது உடல்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழைவிட்டு வெள்ளம் வடியத் தொடங்கியதையடுத்து அவர்களது உடல்கள் தங்கிலிக்குப்பம் வாய்க்காலுக்கு அருகே உள்ள முட்புதரில் சிக்கிக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, இருவருடைய உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுவையைச் சேர்ந்த சாந்தி, தனது மகள் வனிதாவை தங்கிலிக்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தீபாவளி பண்டிகைக்கு மகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக சாந்தி தனது பேத்தி இந்துமதியுடன் புதுச்சேரியில் இருந்து தங்கிலிகுப்பத்துக்கு கடந்த 9-ம் தேதி சென்றார். பேருந்தை விட்டு இறங்கிய அவர்கள் இருவரும் வழியில் உள்ள வாய்க்காலில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருவரும் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கைக்கோர்த்த நிலையில் பிணமாகக் கிடந்த இருவரது உடல்களையும் கண்ட ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications