தர்மபுரி அருகே தண்டவாளத்தில் 'குண்டுவெடிப்பு'- பெரும் விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆவாலப்பட்டி என்ற கிராமத்தில், ரயில் தண்டவாளத்தில் மர்மப்பொருள் வெடித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தர்மபுரி ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்பட்டதாகத் தெரியவில்லை. குண்டு வெடித்தபோது ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வெடி விபத்திற்குக் காரணம் சதிச்செயலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications